இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டேனியல் க்ரெய்க். 50க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட வெப் சீரிசில் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர், நோ டைம் டூ டை ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார். இனி பாண்ட் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார் கிரெய்க்.
இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தால் சினிமா மற்றும் நாடகத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும், 'தி ஆர்டர் ஆப் செயின்ட் மைக்கேல்' மற்றும் 'செயின்ட் ஜார்ஜ்' பட்டம் டேனியல் கிரெய்கிற்கு வழங்கப்பட்டது. மறைந்த ராணியின் மகள் இளவரசி ஆனி, அவருக்கு இந்த பட்டத்தை இங்கிலாந்து அரண்மணையில் நடந்த விழாவில் வழங்கினார்.
ஏற்கெனவே டேனியல் கிரெய்க், பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் கவுரவ தளபதியாக, கடந்த 2021ம் வருடம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.