‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகியிருக்கிறார் பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. மங்கிமேன் என்ற ஹாலிவுட் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சில வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.
சோபிதா துலிபாலா சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர், விதவிதமான ஆடைகள் அணிந்து அதனை அடிக்கடி வெளியிடுவார். அதற்கென்றே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் சோபிதா அணிந்து வெளியிட்டுள்ள ஒரு புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் விலையை இணையத்தில் தேடியவர்களுக்கு அதிர்ச்சி. புடவையின் விலை ரூ.4 லட்சத்து 80 ஆயிரம்.
புடவையுடன் கூடிய சோபிதா துலிபாலா புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. "தீபாவளி நேரத்துல இப்படி வயிற்றெரிச்சலை கிளப்புறீங்களே" என்று அவரது ரசிகர்கள் கமெண்டில் கொதிக்கிறார்கள். இது அந்த சேலைக்கான விளம்பரம் என்றும் விமர்சனம் செய்கிறார்கள்.