எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
புரியாத புதிர், யாருக்கும் அஞ்சேல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‛மைக்கேல்'. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்தத் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். விஜய்சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் வேடங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகிறது.
நேற்று இதன் டீசர் வெளியானது. அதிரடி ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் படமாக இது உருவாகி இருக்கிறது. விஜய்சேதுபதி விக்ரம் வேதா கெட்அப்பில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.