Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி!

01 பிப், 2026 - 05:32 IST
எழுத்தின் அளவு:
Award-received-for-the-song-from-the-film-Asuran-Singer-Sainthavi-thanked-G.V.-Prakas!
Advertisement


இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டு சட்டப்படி விவாகரத்துப் பெற்றார்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அதோடு ஜி.வி.பிரகாஷை பிரிந்து விட்டபோதும், அவர் இசையமைக்கும் படங்களில் அவ்வப்போது பின்னணி பாடுவதோடு, அவர் நடத்தும் இசையை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாடி வருகிறார் சைந்தவி.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு திரைப்படங்களுக்கான மாநில அரசு விருது அறிவித்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் 'அசுரன்' படத்துக்காக சைந்தவி பாடிய 'எள்ளு வய பூக்கலையே' என்ற பாடலுக்கு அவருக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்தது. இதையடுத்து தனது இணையப் பக்கத்தில், 'என்னை நம்பிய ஜி.வி.பிரகாஷ் சாருக்கு நன்றி' என ஒரு பதிவு போட்டுள்ளார் சைந்தவி.

அதோடு தமிழக அரசுக்கும், விருது தேர்வுக்குழு மற்றும் அசுரன் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த அசுரன் படப் பாடலைப் பொறுத்தவரை முதலில் சைந்தவி டிராக்தான் பாடியிருந்தார். வேறு பாடகியை வைத்த அந்த பாடலை பாடதான் திட்டமிட்டிருந்தார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஆனால் சைந்தவி டிராக் பாடியதை கேட்ட அசுரன் பட இயக்குனரான வெற்றி மாறன், இதுவே ரொம்ப சிறப்பாக உள்ளது. இதை அப்படியே படத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்?மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் ... சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

shankar -  ( Posted via: Dinamalar Android App )
02 பிப், 2026 - 06:02 Report Abuse
shankar இவர்கள் பிரிந்தது உண்மையில் மன வருத்தம் அளிக்கிறது. எதற்கு தேவையற்ற ego?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap