ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி'. இந்தப்படம் தெலுங்கிலும் ‛7ஜி பிருந்தாவன் காலனி' என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது .இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தற்போது 'வித் லவ்' புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனஸ்வரா ராஜனிடம் '7ஜி ரெயின்போ காலனி 2' குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது, "7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பு நிறைவு பெறும் கட்டத்தை நெருங்கியுள்ளது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான் உருவாகிறது. 7ஜி ரெயின்போ காலனி வெளியாகும் போது எனக்கு 2 வயது. வளர்ந்த பிறகு அந்த படத்தை பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. நான் எங்கே போனாலும் என்னிடம் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் எப்போது வெளியாகும் என கேட்கின்றனர். நானும் இந்த படத்திற்காக காத்திருக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.