மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' |
பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்தவர் காஜல் அகர்வால். தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பிசியாக இருக்கும்போதே கவுதம் கிச்சலு என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது, அதற்கு நீல் கிக்சுலு என்று பெயர் சூட்டினார். தற்போது நீலின் படத்தை வெளியிட்டுள்ள காஜல் அகர்வால் தனது தாய்மை உணர்வு பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அவர் எழுதியிருப்பதாவது: கடந்த 6 மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக ஆழமான மாற்றம் இது. அம்மாவாக நான் மாறிய பிறகு கற்றுக் கொண்ட விஷயங்கள் நிறைய. நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக சரியான நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை மகனுக்கு சரியாக கொடுப்பது சவாலாக இருந்தது. ஆனால், அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
இப்போது நீ(மகன்) புரண்டு படுக்கிறாய், இடமிருந்து வலம் நகருகிறாய், என் மேல் ஏறுகிறாய் இதெல்லாம் ஏதோ ஒரு இரவில் நடந்ததைப் போல இருக்கிறது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது. இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய் விடுவாய் என்று நினைக்கிறேன். நீ எங்களை எந்த அளவிற்கு என்னை பொறுப்புள்ளவளாக மாற்றி இருக்கிறாய்.
கடவுள் உன் மூலம் எங்களை ஆசிர்வதித்து இருக்கிறார். உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாகக் கருதுகிறேன். என எழுதியுள்ளார் காஜல்.