சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதிகளின் மகள் ஷிவாத்மிகா. 2019ம் ஆண்டு 'தூரசானி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், பிறகு 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே தெலுங்கில் நடித்தார். அறிமுகமாகி 6 ஆண்டுகளில் 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
ஷிவாத்மிகா நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'பாம்'. வருகிற 12ம் தேதி வெளியாகிறது. இதில் அவர் அர்ஜூன் தாஸ் ஜோடியாக நடித்துள்ளார். “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். நாசர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ஷிவாத்மிகா கூறும்போது, "ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழக்கு வந்திருக்கிறேன். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படம் வெளிவருகிறது. எங்களை விட தயாரிப்பாளருக்காக இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை இந்த கதாபாத்திரத்திற்காக நம்பியதற்கு நன்றி. அர்ஜூன் தாஸ் நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார். அவருடன் நடித்ததும் மகிழ்ச்சி" என்றார்.