ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ், டிரஷ்சர் ஹண்டர் பாணியிலான புதையலை தேடிச் செல்லும் அட்வென்ஜர் படமாக உருவாகிறது. இதன் கதையை ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை எழுதியவருமான விஜயேந்திர பிரசாத் எழுதி இருக்கிறார்.
இந்த படமும் 500 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தீபிகா ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் உலகம் அறிந்த நடிகையாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து அது இறுதிகட்டத்தையும் அடைந்துள்ளது. இதுவல்லாமல் ஒரு முக்கியமான ஹாலிவுட் நடிகர், நடிகையும் நடிக்க இருக்கிறார்கள்.
தீபிகா தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நாக் அஸ்வின் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.