அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் நடித்துள்ள படம் பிரின்ஸ். இந்த படத்தில் அவருடன் மரியா, சத்யராஜ், பிரேம்ஜி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் தமிழ்நாட்டில் 600 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 300 தியேட்டர்களிலும் இன்றைய தினம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதற்காக இன்று காலை சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வருகை தந்தார் சிவகார்த்திகேயன். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். அதோடு தியேட்டருக்குள் வந்த சிவகார்த்திகேயன் பிம்பிலிக்கி பிளாப்பி என்ற பாடலுக்கு ரசிகர்கள் நடனமாடியதைப் பார்த்து தானும் சிறிது நேரம் உற்சாகமாக நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். மேலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்களில் முதன்முறையாக இந்த படம்தான் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது. இதேபோல் இந்த தீபாவளிக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் திரைக்கு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.