எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

அஜய்தீஷன் நடிக்கும் ‛பூக்கி' படத்தில் முக்கியமான வேடத்தில் வருகிறார் நடிகர் பாண்டியராஜன். அவர் பேசுகையில், ‛‛இந்த படத்தில் நடித்தபோது முழு சம்பளமும் டக்கென வந்தது. இளைஞர்களுடன் பணியாற்றுவது நல்ல அனுபவம். நான் படம் இயக்கப்போகிறேன் என்று என் குருநாதர் கே.பாக்யராஜிடம் சொன்ன நினைவுகள் வந்தது. ஒரு நள்ளிரவு இதை சொல்லி, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அப்போது அவர் 'படம் டைரக்டர் செய், ஆனா, டைரக்ட் பண்ணுவதாக நடிக்காதே' என எனக்கு அட்வைஸ் செய்தார்.
சில இயக்குனர்கள் நாம் இயக்குனர், செட்டில் பந்தா காட்ட வேண்டும் என்பதற்காக சவுண்டுவிடுவார்கள். கடுமையாக வேலை செய்வது போல காண்பிப்பார்கள். அதெல்லாம் தேவையில்லை. பிரேமில் என்ன வருகிறது என்பதற்காக உழைக்க வேண்டியதுதான் டைரக்டர் பொறுப்பு, வெளியில் டைரக்டராக நடிக்க தேவையில்லை. இப்போதுள்ள இயக்குனர்கள் சிறப்பாக திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள்''என்றார்.
இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடித்த சுந்தரா டிராவல்ஸ் ராதா, ''என்னுடைய சின்ன வயதில் பாண்டிராஜன் சாரை பார்த்தது நினைவுக்கு வருகிறது. அவர் என்னை வைத்து டெஸ்ட் சூட் எடுத்தார். கேமரா, குடைகள் வந்தது என்னை போட்டோ எடுத்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். பல ஆண்டுகள் படத்தில் அவர் நடிக்கும் படத்திலும் நானும் இருப்பது மகிழ்ச்சி'' என்றார்.