நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் |
மிஷ்கின் இயக்கத்தில் ‛பிசாசு 2, ட்ரெயின்' படங்கள் தயாராக இருக்கிறது. இப்போது நடிப்பிலும் பிஸியாகிக்கொண்டு இருக்கிறார் மிஷ்கின். ‛நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சவரக்கத்தி' போன்ற படங்களில் அவர் கதைநாயகனாக அல்லது அதற்கு இணையான வேடத்தில் நடித்து இருக்கிறார். பின்னர் பல படங்களிலும் குணசித்திர, வில்லன் ரோலில் நடித்து இருக்கிறார். குறிப்பாக, சிவகார்த்திகேயனின் ‛மாவீரன்', பிரதீப் ரங்கநாதன் ‛டிராகன்' படங்களின் வெற்றி, அதில் நடித்த மிஷ்கினுக்கு நிறைய பட வாய்ப்புகளை தேடி வருகிறது.
‛வணங்கான்' படத்தில் அவர் நடித்த நீதிபதி கேரக்டர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. ‛ஓஹோ எந்தன் பேபி' படத்தில் அவர் மிஷ்கினாகவே வந்தார். அந்தகாட்சியும் பேசப்பட்டது. இப்போதெல்லாம் பல இயக்குனர்கள் மிஷ்கினிடம் கதை சொல்லி, கால்ஷீட் வாங்க காத்திருக்கிறார்கள். ஆனாலும், பணிசுமை, தனது பட பணிகள் காரணமாக பல படங்களுக்கு அவர் நோ சொல்கிறாராம். ‛தலைவன் தலைவி' படத்தில் நித்யாமேனன் அப்பாவாக முதலில் நடிக்க இருந்தவர் மிஷ்கின் தானாம். ஆனால், ட்ரெயின் பட வேலைகள் காரணமாக அதில் அவர் நடிக்கவில்லை.
ட்ரெயின் பட வேலைகள் குறைந்துவிட்டதால், இப்போது நடிப்பில் ஆர்வம் காண்பிக்கிறார். சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷ் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். பெரிய ஹீரோ, சின்ன படம் என்று பார்ப்பதில்லை. தனக்கு பிடித்து இருந்தால் பந்தா இல்லாமல் நடிக்க ஓகே சொல்கிறாராம் மிஷ்கின். ஆனால், அவருக்கு அதிகம் கோபம் வரும் என்பதால் இயக்குனர்கள்தான் படப்பிடிப்பில் பயப்படுகிறார்களாம்.