பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‛மதராஸி' படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தின் வெற்றியை பெரிதும் நம்பியிருக்கிறார் முருகதாஸ். காரணம், இந்தியில் சல்மான்கானை வைத்து அவர் இயக்கிய ‛சிக்கந்தர்' பிளாப். அதற்கு முன்பு இந்தியில் இயக்கிய ‛அகிரா, ஹாலிடே' படங்களும் ஹிட் ஆகவில்லை. தமிழில் இதற்குமுன்பு இயக்கிய ரஜினியின் ‛தர்பார்', விஜயின் ‛கத்தி', மகேஷ்பாபு நடித்த ‛ஸ்பைடர்' படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
ஆகவே ‛துப்பாக்கி' மாதிரியான வெற்றிக்காக அவர் காத்திருக்கிறார். அந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஓடிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக ஹிட் கொடுக்க போராடிக்கொண்டு இருக்கிறார். சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நிலையில், அவரை வைத்து ‛மான் காரத்தே' என்ற வெற்றி படத்தை தயாரித்தவர் முருகதாஸ். அந்த நட்பில்தான் முருகதாசுக்கு சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். சினிமாவில் 25வது ஆண்டை தொடப்போகும் முருகதாஸ், இதுவரை இயக்கிய 15 படங்களில் அஜித்தின் ‛தீனா', விஜயகாந்த்தின் ‛ரமணா', சூர்யாவின் ‛கஜினி', விஜயின் ‛துப்பாக்கி' படங்கள்தான் மிகப்பெரிய வெற்றி படங்கள்.