சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கடந்த 2016ம் ஆண்டில் பாஸ்டியன் என்ற உணவகத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் திறந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி. அதன் பிறகு அதே பாந்த்ராவில் ஒரு பெரிய இடத்துக்கு அது மாற்றப்பட்டு உணவு பிரியர்கள் மற்றும் பிரபலங்களுக்கான ஒரு இடமாக மாறியது.
இந்த நிலையில் தனது இணையப் பக்கத்தில் ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தனது மும்பை உணவகமான பாஸ்டியன் செப்டம்பர் 4ம் தேதியான நாளை மூடப்படுவதாக தெரிவித்திருக்கிறார். தனது நட்பு வட்டாரத்துக்கு இன்று அவர் ஒரு இரவு விருந்தும் கொடுக்கிறார். என்றாலும் எதற்காக அந்த ஓட்டல் மூடப்படுகிறது என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
மேலும் தற்போது ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் 60 கோடி ரூபாய் கடன் மற்றும் முதலீடு முறைகேட்டில் சிக்கி இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைக்காக கூட அவர்கள் அந்த ஹோட்டலை விற்பனை செய்யலாம் என்கிற கருத்துக்களும் வெளியாகி உள்ளன.