கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

மலையாளத் திரையுலகத்திலிருந்து தமிழுக்கு வந்து நடிக்கும் நடிகைகள் பலரும் 'மல்டி டேலன்ட்' நடிகைகளாகவே உள்ளனர். ரம்யா நம்பீசன், அபிராமி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் தமிழ்ப் பாடல்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்களது பாடும் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். ரம்யாவும், அபிராமியும் டிவி நிகழ்ச்சிகளில் நடுவர்களாகப் பங்கேற்றும் உள்ளார்கள்.
அவர்கள் வரிசையில் அழகாகப் பாடும் மற்றொரு நடிகையாக மடோனா செபாஸ்டியன் சேர்ந்திருக்கிறார். ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில் அவர் இளையராஜா இசையில் 80களில் வெளிவந்த 'தென்றலே என்னைத் தொடு' படத்தில் இடம் பெற்ற 'தென்றல் வந்து என்னைத் தொடும்' பாடலைப் பாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் லைக் கொடுத்து பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்கள். மடோனா இவ்வளவு அழகாகப் பாடுவதில் ஆச்சரியமில்லை. ஏற்கெனவே மலையாளத்தில் இரண்டு படங்களிலும், தமிழில் 'கவண்' படத்திலும் பாடியுள்ளார். ஆனால், அந்தப் பாடல் பற்றி ரசிகர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. பாடல் அவ்வளவாக ஹிட்டாகவில்லை. விரைவில் அவருக்குப் பாடகியாகவும் சில வாய்ப்புகள் மீண்டும் வரலாம்.