ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்து நடித்த சமந்தா, அடுத்தபடியாக நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தற்போது துபாய் நாட்டிற்கு சென்றுள்ள சமந்தா, அங்கு நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு ஒரு ஆணின் கையையும் அவர் பிடித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் அந்த ஆணின் முகம் தெரியவில்லை. இப்படி ஒரு வீடியோவை சமந்தா வெளியிட்டதை அடுத்து அந்த ஆண் தற்போது சமந்தா காதலித்து வரும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே இயக்குனர் ராஜ் நிடிமொரு கையை பிடித்துக் கொண்டு சமந்தா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதோடு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியின்போதும் இருவரும் கைகோர்த்தபடி நடந்தார்கள். இந்த நிலையில் தான், ஒருவரின் கையை தான் பற்றிக்கொண்டிருக்கும் வீடியோவை சமந்தா வெளியிட்டிருப்பதை அடுத்து அந்த நபரும் இயக்குனர் ராஜ் நிடிமொருதான் என்று ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.