புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

'கிரீடம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், சைவம்,தாண்டவம், வனமகன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இப்போது இவர் விஜய் என பெரை மாற்றியுள்ளார். சில ஆண்டுகளாக ஒரு வெற்றி படம் கொடுக்க போராடி வருகிறார். கடைசியாக அவர் இயக்கிய 'வனமகன், வாட்ச்மேன், மிஷன் சாப்டர் 2' படங்கள் வெற்றி பெறவில்லை. அனுஷ்காவை வைத்து இயக்க இருந்த படமும் தாமதம் ஆகிறது.
இந்நிலையில், புதுமுகங்கள் மதும்கேஷ், ஜியாசங்கரை வைத்து விஜய் இயக்கிய 'காதல் ரீசெட் ரிபீட்' படம் மார்ச் 6 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹாலந்தில் எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ளார். மதன்கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.
படம் குறித்து பேசியுள்ள விஜய், ''முழுக்க ஹாலந்தில் படப்பிடிப்பு நடத்தது. மலையாள நடிகர் அர்ஜூன் முக்கியமான வேடத்தில் வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர், விஜிசந்திரசேகரும் இருக்கிறார்கள். என் படங்களில் நா.முத்துக்குமார் பாடல்கள் பிரபலம். இப்போது மதன்கார்க்கி எனக்கு செட்டாகி உள்ளார். ஒவ்வொரு பாடலையும் மணிக்கணக்கில் ரிக்கார்டிங் செய்து, மாதக்கணக்கில் அதை மெருகேற்றுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த பட புரோமோ வீடியோவில் அவரை நடிக்க வைத்துள்ளோம். பல்வேறு சிரமங்கள், பிரச்னைகளுக்கு மத்தியில் ஹாலந்தில் படப்பிடிப்பை முடித்தோம்'' ' என்றார்.
ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், ''மின்னலே என்னுடைய முதல் படம். 25 ஆண்டுகள் ஓடிவிட்டது. அந்த படத்தில் ஹீரோ மாதவன், ஹீரோயின் ரீமாசென், இயக்குனர் கவுதம் மேனன் என எல்லாரும் புதியவர்கள். கதை நன்றாக இருந்ததால் படம் ஹிட்டானது. இந்த படத்திலும் புதியவர்கள் நடித்து இருக்கிறார்கள். எனக்கு பழைய நினைவுகள் வருகிறது.''என்றார்.




