நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த 'மின்னலே' என்ற படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன்பிறகு ஏராளமான ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' படத்திற்கு பிறகு தற்போது 'துருவ நட்சத்திரம், பேட் பாய் கார்த்திக்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 'ஏஐ தொழில்நுட்பத்தில் மரணம் அடைந்த பாடகர்கள் மலேசியா வாசுதேவன், பவதாரணி உள்ளிட்ட பல பாடகர்களின் குரலைக் மீண்டும் கொண்டு வருகிறார்களே. இது போன்ற முயற்சிகளில் நீங்கள் ஏன் ஈடுபடுவதில்லை' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''என்னை பொருத்தவரை எப்போதுமே உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பேன். எவ்வளவோ பேர் பாடுவதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற நபர்களுக்கு பாட வாய்ப்பு கொடுத்தால் அவர்களுக்கு பயனாக இருக்கும். அது இல்லாமல் இறந்த போன பாடகர்களின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் கொண்டு வருவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதன் காரணமாகவே அது போன்று முயற்சிகளில் நான் ஈடுபடுவதில்லை'' என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.