பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

அஜித்குமார், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளதாக படத்தைத் விநியோகம் செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 5 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 170 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என காலையில் தகவல்கள் வெளிவந்தன. தற்போது தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் என்பது நிறைவான ஒரு வசூல்.
இதற்கு முன்பு அஜித் நடித்து வெளிவந்த 'விஸ்வாசம்' படம் 3 நாட்களில் 100 கோடி வசூலித்தது. 'நேர் கொண்ட பார்வை' 6 நாட்களில் 100 கோடி வசூலித்தது. தற்போது 'குட் பேட் அக்லி' விரைவில் 100 கோடி வசூலைப் பெற்ற அஜித் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இப்படம் வியாபார ரீதியாக வசூலைப் பெற்று வருவது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.