காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

தமன் குமார் நடித்த 'ஒரு நொடி' படத்தை இயக்கிய மணிமாறன், மீண்டும் தமனை வைத்து இயக்கும் திகில் படம் 'ஜென்ம நட்சத்திரம்'. இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த தலைவாசல் விஜய் பேசுகையில் ''எனக்கு பெயர் வாங்கிக்கொடுத்த பல படங்களில் சின்ன கேரக்டரில்தான் நடித்து இருக்கிறேன். 'சண்டக்கோழி, மகாநதி, மகளிர் மட்டும்' படங்களில் சில சீன்களில் வருவேன். ஆனால் அந்த கேரக்டர் இன்றும் மக்களால் பல இடங்களில் பேசப்படுகிறது.
இந்த படத்தில் கொஞ்ச சீனில் வந்தாலும் நல்ல கேரக்டர். ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்கிறேன். நான் சமீபத்தில் சேலத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது, ஹை வேயில் தலைவாசல் என்ற ஒரு ஓட்டல் போர்டு பார்த்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷம், டக்கென காரை நிறுத்திவிட்டு அதை போட்டோ எடுத்தேன். அப்போது ஒருவர் உரிமையாக வந்து என்னிடம் பேசினார். அப்புறம், மகள் எப்படி இருக்கிறார். மருமகன் மேட்ச் விளையாடுகிறார் போல என பல விஷயங்களை அக்கறையாக பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உங்க மகள் திருமணம் ஜாம்ஜாம்னு நடந்தது. நான் வந்து இருந்தேன் என்றார்.
நீ்ங்க வந்தீங்களா? எந்தவகையில் உறவினர் என்று கேட்டபோது, அட, போங்க தம்பி, நான் தலைவாசல், நீங்களும் அந்த ஊர், அழைப்பிதழ் இல்லாமலே நாங்க வந்தோம் என்றார். அப்போது யோசித்து பார்த்தேன். என் மகள் திருமணத்துக்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்தார்கள். அவர்களில் சிலர் இப்படி அன்பில் வந்து இருக்கிறார்கள் என்று நினைத்து பார்த்து சந்தோசப்பட்டேன் என்றார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் தலைவாசல். 1992ல் செல்வா இயக்கத்தில் வெளியான தலைவாசல் படத்தில் நடித்து புகழ் பெற்றதால் விஜய் என்ற நடிகர் தலைவாசல் விஜய் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




