தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ‛மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால்' போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.
இதற்கிடையில் இவர்கள் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு கவுதம் மேனன் வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதில் கதாநாயகனாக விஷால் நடிக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.