இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆண்டுகால திருமண உறவை முறிப்பதாக அறிவித்தனர். இது ரஹ்மான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று (மார்ச் 16) காலையில், ரஹ்மானுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரிழப்பு காரணமாக சிகிச்சை பெற்ற அவர், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையே சாய்ரா பானு வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ரஹ்மான் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். நாங்கள் இருவரும் இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். அவருக்கு எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை. அதனால் என்னை ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம் என ஊடகங்கள் வசம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு சாய்ரா பானு கூறியுள்ளார்.