''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு |

கடந்த சில நாட்களுக்கு முன்பு துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகிய பிரபல நடிகர்களின் வீடுகளில் சோதனை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நடிகர்கள் பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட சொகுசு கார்களை இந்தியாவில் மறு பதிவு செய்து வரி ஏய்ப்பு நடத்தியதாக கூறி பல இடங்களில் 30க்கும் மேற்பட்ட கார்களை கைப்பற்றினார். அதில் நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் துல்கர் சல்மான் இந்த கார்களை முறையான வரிகள் அனைத்தையும் செலுத்தி தான் வாங்கியதாக கூறியுள்ளதுடன் அதற்கான ஆதாரங்களை காட்டியும் சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தனது கார்களை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் இது போன்ற விலை உயர்ந்த கார்களை வழக்கை காரணம் காட்டி பயன்படுத்தாமல் நீண்ட நாட்கள் அப்படியே விட்டால் அந்த கார் உபயோகப்படுத்துவதற்கு பயனற்றதாகிவிடும் என்றும் துல்கர் சல்மான் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைத்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளில், ‛மனுதாரர் பயன்படுத்தும் ஒரு பொருளை விடுவிப்பது என்பது அவருக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்று. அவரது வாகனத்தை முறையான காரணங்கள் எதுவும் அவருக்கு தெரிவிக்காமல் பறிமுதல் செய்து இருக்கிறீர்கள். நீங்கள் இதுபோன்று பறிமுதல் செய்யும் எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு நியாயமான காரணத்தை சொல்லிவிட முடியும் அப்படித்தானே.. ? நீங்கள் ஒருவரின் சொத்தை பறிமுதல் செய்கிறீர்கள். ஆனால் அதற்கான முறையான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியுள்ளீர்கள்.' என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும் மனுதாரர் (துல்கர் சல்மான்) தனது காரை திரும்ப கேட்கும் கோரிக்கை மனுவை சுங்கத்துறை நிராகரித்தால், அதற்கான காரணங்களை விரிவாக சொல்லி இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் துல்கர் சல்மானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




