'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

பிரபல பாலிவுட் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பிரியதர்ஷன் கடந்த 2016ல் மோகன்லாலை வைத்து இயக்கிய ஒப்பம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதில் அக்ஷய் குமார், சைப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். ஹைவான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாகவே கேரளாவின் எர்ணாகுளத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் குருவாயூர் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட்டுள்ளார். இதற்காக குருவாயூர் அருகில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவர் அங்கிருந்து பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் துண்டு அணிந்து கொண்டு குருவாயூர் கோவில் சென்று வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.