2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், தற்போது பிரமோசன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினியின் கபாலி, கமலின் விக்ரம் படங்களின் பிரமோசன்கள் ரயில்களில் செய்யப்பட்டது போன்று வாரிசு படத்தின் பிரமோசன்கள் மெட்ரோ ரயில்களில் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தின் இசை விழா வருகிற 24ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள அகிம்சா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாடுகளில் பல பகுதிகளில் வாரிசு முன்பதிவு தொடங்கி விட்டது. பிரிட்டனில் 100 பகுதிகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் விறுவிறுப்பாக டிக்கெட்டுகள் பதிவாகி வருகிறது. ரசிகர்களின் இந்த ஆர்வத்தை பார்க்கும்போது வெளிநாடுகளில் வாரிசு படம் விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கும் என தெரிகிறது என்று அந்நிறுவனம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.