காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் இணைந்து நடித்துள்ள படம் துணிவு. பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா என்ற பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் காசேதான் கடவுளடா என்ற பாடலும் வெளியாக உள்ளது.
துணிவு படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், தற்போது வெளிநாடுகளில் அப்படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து துணிவு படத்தின் ரன்னிங் டைம் குறித்த ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. 165 நிமிடம் அதாவது 2 மணி நேரம் 45 நிமிடம் இப்படத்தின் ரன்னிங் டைம் என்று தகவல் வைரலாகி வருகிறது. என்றாலும் தணிக்கை சான்றிதழுக்கு பிறகு படக்குழு வெளியிடுவதே சரியான ரன்னிங் டைமாக இருக்கும்.
தற்போது துணிவு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் இரண்டொரு வாரங்களில் தணிக்கை குழுவினருக்கு படம் திரையிட்டு காண்பிக்கப்படும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன.