ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
'தில் ராஜு' என்றால் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெரியும், 'வாரிசு' ராஜு என்றால்தான் தமிழ் ரசிகர்களுக்கத் தெரியும். விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நுழைந்தவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு.
அவரது தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிக்கும் 'பேமிலி ஸ்டார்' படம் இந்த வாரம் ஏப்ரல் 5ம் தேதி தெலுங்கு, தமிழில் வெளியாகிறது. இப்படத்தின் தெலுங்கு பத்திரியைளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய தில் ராஜு, “நாங்கள் தயாரித்த 'கெரிந்தா' படத்தின் ஆடிஷனில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். ஆனால், அப்போது அவர் நிராகரிக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியவில்லை. 'பெல்லி சூப்புலு' படத்திற்குப் பிறகு அந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்,” என்றார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய விஜய் தேவரகொண்டா, “அந்த சமயத்தில் எனக்கும் ஒரு நாள் வரும், நான் யார் என்பதை அப்போது இவர்களுக்குக் காட்டுவேன் என்று நினைத்தேன். இன்று தில் ராஜு படத்தின் கதாநாயகன் நான். நாளை நான் வெற்றி பெற்றால் பலரும் நிம்மதியாக இருப்பார்கள்,” என்றார்.
அதற்கு தில் ராஜு, “நீங்கள் காயப்பட்டால்தான், அதை சவாலாக எடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் மேலும் உழைப்பீர்கள், வெற்றி உங்களைத் தொடரும். அப்படி எனது வாழ்க்கையில் நானும் பல விதங்களில் காயப்பட்டுள்ளேன். காயப்பட்டால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்,” என்று விளக்கம் கொடுத்தார்.