விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! |
நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகளை தத்தெடுத்து படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதளத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை அழைத்து வந்து தனது கணவர் இறந்து விட்டதாகவும், இந்த குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்யுங்கள் என்று கூறினார். அப்போது அந்த குழந்தைகளை என் வீட்டிலேயே தங்க வைத்து படிக்க வைத்தேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வைக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் என் சொந்த வீட்டை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, வாடகை வீட்டுக்கு சென்றேன்.
இந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படிக்க வந்த குழந்தைகளில் ஒருவன் வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கிறான். தற்போது அவர் என்னை தேடி வந்து, தன்னால் முடிந்த அளவுக்கு குழந்தைகளை படிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி என்னுடைய சேவை அடுத்த தலைமுறைக்கு சென்றிருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு குழந்தையை படிக்க வைத்தால் மட்டும் போதாது. அந்த குழந்தை படித்து நல்ல நிலைக்கு வந்த பிறகு மற்ற குழந்தைகளையும் படிக்க வைப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.
சேவை என்பதுதான் உண்மையான கடவுளாகும். அந்த சேவையை தற்போது அடுத்த தலைமுறையினர் தொடர முன் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சமூகத்தை இதன் மூலம் நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்று கருதுகிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.