ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் |

கடந்த 202௦ல் நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'மூக்குத்தி அம்மன் 2' என்கிற பெயரில் தயாராகி வருகிறது. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் நடிகை மீனா, ரெஜினா கசான்ட்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நடிகர் துனியா விஜய் தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார்.
கன்னடத்தில் நடிகர், இயக்குனர் என கடந்த 20 வருடங்களாக இரட்டை சவாரி செய்து வரும் துனியா விஜய் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது இந்த படத்தில் துனியா விஜய் சம்பந்தமான காட்சிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி உள்ளிட்ட படக்குழுவினரிடம் அவர் விடைபெற்று கிளம்பினார். இது குறித்த வீடியோ ஒன்று படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகி உள்ளது.