பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சென்னையில் நடந்த கிச்சா சுதீப்பின் ‛மார்க்' பட பிரஸ்மீட்டில் யோகிபாபு கலந்து கொண்டதும், அவர் கேள்விகளுக்கு பதில் அளித்ததும் வைரல் ஆகிறது. பல படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார் யோகிபாபு. ஆகவே, தான் நடிக்கும் பட விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வது இல்லை. மார்க் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பதாலும், பிரபல கன்னட ஹீரோ சுதீப் நடிப்பதாலும் அதில் கலந்துகொண்டார் யோகிபாபு.
அதில் பேசிய சுதீப், 'யோகிபாபு கால்ஷீட் பிஸி. அதை தவணை முறையில் வாங்க வேண்டியது உள்ளது என்று கலாய்த்தார். படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய நிலையிலும், யோகிபாபு தேதிகள் கிடைத்ததால் தொடர்ந்து பணியாற்றினோம். இல்லாவிட்டால் அவர் கால்ஷீட்டை வாங்க முடியாது. '' என்று சொன்னார்.
யோகிபாபு பேசுகையில் ''நான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். சிலர் என்னிடம் சில நாட்கள் கால்ஷீட் வாங்கிவிட்டு, காமெடியனாக நடிக்க வைத்துவிட்டு நான் ஹீரோ என விளம்பரப்படுத்துகிறார்கள். நான் 22 ஆண்டுகள் போராடி இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்'' என்று பேசினார். மேலும் இந்த பட விஷயத்தை பேசுங்கள், வேறு பட விவகாரங்களை அங்கே பார்க்கலாம்' என்று விளக்கம் அளித்தார்.