காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் |
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் காந்தாரா சாப்டர் 1. ருக்மணி வசந்த் நாயாகியாக நடித்துள்ள இந்த படம் இதுவரை 655 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரிஷப் ஷெட்டியின் மாற்றத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அவரது நடிப்பு கைத்தட்டல்களை பெற்று வருகிறது.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது நடந்த சவால்களை போட்டோவாக வெளியிட்டுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதில், உடல் ரீதியாக கடினமான இந்த படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பின் போது எனது கால்கள் வீங்கி விட்டது. எனது உடம்பில் சோர்வு, கால்களில் காயங்கள் இருந்தபோதிலும் இந்த காட்சியை கஷ்டப்பட்டு படமாக்கினேன். நான் நம்பும் தெய்வீக சக்தி தான் எனக்கு அப்போது சிறந்த ஆற்றலை கொடுத்தது என்றும் கூறியுள்ள ரிஷப் ஷெட்டி, வர்த்தக ரீதியாக இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.