மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” |

திரில்லர் மற்றும் துப்பறியும் கதைகளை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் அறிவழகன் சமீபகாலமாக நடிகர் அருண்விஜய் வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். இந்தநிலையில் தற்போது சபதம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார்.
கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஈரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான அறிவழகன், அந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் தற்போது சபதம் படத்திற்காக இவர்கள் இணைந்து உள்ளனர். இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது.
அதுமட்டுமல்ல ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமனும் இந்த சபதம் படத்திற்காக இவர்களுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் கதைக்கு ஆதி தான் சரியான நபராக இருந்தார்.. அருண்விஜய்க்கு அடுத்ததாக ஆதியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ரொம்பவே வசதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அறிவழகன். இந்த படம் ஹாரர் திரில்லர் ஆக உருவாகிறது.