தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்கிற படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.. ஆனாலும் சில வருடங்கள் கழித்த பிறகு தமிழில் அவர் நடித்த பேட்ட திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து விஜய், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னேறினார் மாளவிகா மோகனன். அதன் பிறகு பெரிய அளவில் மலையாள படங்களில் நடிக்காத மாளவிகா மோகனன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது கிறிஸ்டி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் மேத்யூ தாமஸ் 20 வயதே ஆனவர்.. அந்தவகையில் தன்னைவிட ஒன்பது வயது குறைந்த இளம் நடிகருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிப்பது ஆச்சரியமான விஷயம்தான். அதேசமயம் இந்த படத்தின் கதையை பிரபல கதாசிரியர்கள் பென்யமின் மற்றும் ஜிஆர் இந்துகோபன் என்கிற இரண்டு பிரபல எழுத்தாளர்கள் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆல்வின் ஹென்றி இயக்குகிறார்
கதைக்கு இந்த வயதிற்குபட்ட கதாபாத்திரங்கள் தேவைப்பட்டுள்ளன என்பதாலும் பிரபல கதாசிரியர்கள் என்பதாலும் மாளவிகா மோகனன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் தயாராகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பூவார் மற்றும் மாலத்தீவுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.