''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
வினோத் இயக்கத்தில் விஷால், சுனைனா நடித்துள்ள ‛லத்தி' படம் டிச., 22ல் வெளியாகிறது. இதற்காக ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்கிறார் விஷால். கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், ‛‛இந்த படத்தில் முதல் முறையாக ஒரு இரண்டாம் நிலை காவலராக 8 வயது சிறுவனின் தந்தையாக நடித்துள்ளேன். விவசாயிகள் குறித்து சரியான திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. அவர்களது பிரச்சனைகள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளையும் கூற வேண்டும்.
எனது நண்பர் உதயநிதி அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்காக சேவை செய்து வருவதும் அரசியல் தான் என்ற அடிப்படையில் நானும் அரசியலில் தான் இருக்கிறேன். சிறுபட்ஜெட் படங்களை தியேட்டர்களில் மக்கள் பார்ப்பது குறைவதால் நஷ்டம் அடைகின்றன. திருமணம் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.
இலங்கை அகதிகள் முகாமில் எனது திரைப்படங்களை திரையிட நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை. திருமணம் குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் அறிவிக்கிறேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.