100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
ஒவ்வொரு வருடமும் கூகுள் தேடுதல் இணையதளம் அந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள், அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்கள் என டாப் 100 பட்டியல்களை வெளியிடுவது உண்டு. அந்தவகையில் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 ஆசிய நடிகர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து 5 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகர் விஜய்க்கு 15 வது இடம் கிடைத்துள்ளது. சூர்யாவுக்கு 45வது இடமும் தனுசுக்கு 46வதுவது இடமும் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 68வது இடத்திலும் அஜித்குமார் 78வது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த வருடமும் இதே போல அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் இடம் பிடித்திருந்தார் என்பதும் அவருக்கு 19வது இடம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இந்த வருடம் வெளியானதும், அதைத்தொடர்ந்து அவர் வாரிசு திரைப்படம் மூலம் தெலுங்கில் முதன்முறையாக நுழைந்ததும் இந்த வருடம் அதிகம் பேசுபொருளாக அமைந்துவிட்டது என்பதால் கூகுள் தேடுதல் வேட்டையில் அவர் அதிகம் தேடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..