சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' |
தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏற்கனவே மலையாள படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது கிருஷ்டி என்ற ஒரு மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.
அல்வின் ஹென்றி என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில், மேத்யூ தாமஸ் என்பவர் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் தன்னைவிட வயதான பெண்ணை ஒரு இளைஞர் காதலிக்கும் கதையில் தயாராகி உள்ளது. வருகிற பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வரும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. மாளவிகா மோகனன் டியூசன் டீச்சராக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.