'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் 'துரந்தர்'. மாதவன், சஞ்சய் தத், அக் ஷய் கண்ணா, சாரா அர்ஜூன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்தனர். உளவாளி வேடத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். 1300 கோடி வசூல் செய்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‛துரந்தர் தி ரிவென்ச்' என்ற பெயரில் இதேக் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. வருகிற மார்ச் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மார்ச் 7ம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலர் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே ஆக் ஷன் காட்சிகளாக தான் இருக்கிறது. துப்பாக்கிச் சூடு, பாம் பிளாஸ்ட், அதிரடி ஸ்டன்ட் போன்ற காட்சிகள் தான் அதிகம் நிறைந்துள்ளன. தற்போதைக்கு ஹிந்தியில் மட்டும் டிரைலர் வெளியாகி உள்ளது. ஓரிரு நாளில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டிரைலர் வெளியாகலாம்.
துரந்தர் முதல்பாகம் ஹிந்தியில் மட்டும் தியேட்டர்களில் வெளியாகி ஓடிடியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டனர். தற்போது துரந்தர் 2வை பான் இந்தியா வெளியீடாகவே வரும் 19ம் தேதி வெளியிடுகின்றனர்.