சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் |
கடந்த 2021ல் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கும் துணை நடிகரான மகா காந்தி என்பவருக்கும் வார்த்தை தகராறு ஏற்பட்டு அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மீது தன்னை தாக்கியதாக வழக்கு தொடுத்ததுடன் தனக்கு அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தார். ஆனால் விஜய்சேதுபதியோ, லாப நோக்கில் தொடுக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு எதிர்மனுதாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து விசாரணையில் சம்பவம் பெங்களூரில் நடைபெற்றதால் இங்கே விசாரிக்க முடியாது எனக்கூறி சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனாலும் அடுத்ததாக மகா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்து மீண்டும் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விஜய் சேதுபதி, மகா காந்தி இருவருமே நீதிமன்ற கவுன்சில் மூலமாக பரஸ்பரம் தங்களுக்குள் பேசி சமரசம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், வரும் மார்ச் 2ம் தேதி வழக்கு விசாரணையின்போது இரண்டு பேருமே வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கவுன்சிலிங் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.