‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
எண்பது தொண்ணூறுளில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை பானுப்ரியா. ஒரு திறமையான நடன கலைஞரான இவர் நான் நடித்து வந்த சமயத்திலேயே தன்னுடன் நடித்த சக நடிகைகள் பலருக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். தனியாக நடன பள்ளி நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி எப்போதாவது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது தான் கடந்த இரண்டு வருடமாக நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அதனாலேயே நடனத்திற்காக தற்போது பிராக்டிஸ் செய்வதைக் கூட நிறுத்திவிட்டதாகவும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்குமுன்பு சில நேரங்கள் சில மனிதர்கள் என்கிற படத்தில் தான் நடித்தபோது டைரக்டர் ஆக்சன் என்று சொன்னபிறகும் வசனம் ஞாபகத்துக்கு வராமல் தடுமாறி நின்றதையும் குறிப்பிட்டுள்ளார் பானுப்ரியா.