மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? | “ரசிகர்களின் ரசனைமிகு வில்லன்” நடிகர் ரகுவரன். | 'ரொம்ப வலிக்குது' : மகள் பற்றி விஜய் ஆண்டனி மனைவி உருக்கம் | இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய இசைக்குயில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி. | அம்பிகா, ராதா ஸ்டுடியோவில் படப்பிடிப்புகளுக்குத் தடை ? | 3 மணி நேரம் ஓடப் போகும் 'சலார்' | ஒரே நாளில் இரண்டு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சமந்தா | பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! |
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்கிற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவர் இன்னும் பெரிய அளவில் பிரபலமானார். பின்னர் கவின் நடிப்பில் லிப்ட் உள்ளிட்ட ஒரு சில படங்கள் வெளியானாலும் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கவின், அபர்ணாதாஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள டாடா என்கிற திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியுள்ளார்.
படம் பார்த்த பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் இந்தப்படம் ஒரு பீல்குட் படமாக இருப்பதாகவும் காதலை சற்றே வித்தியாசமான கோணத்தில் அணுகி இருப்பதாகவும் தங்களது விமர்சனங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக படம் வெளியான அடுத்தநாளே இயக்குனர் கணேஷ் கே பாபுவுக்கு தங்களது நிறுவனத்தில் படம் இயக்கும் வாய்ப்பை லைக்கா நிறுவனம் வழங்கியுள்ளது. இதுகுறித்து ஒப்பந்தமும் போடப்பட்டு அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது..