'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ள ஹிந்திப் படம் 'துரந்தர் 2'. இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி சுமார் 1400 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் 2' மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு மார்ச் 7ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
ஹிந்தி டிரைலர் தற்போது 49 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 5 மில்லியன், தமிழ் டிரைலர் 4 மில்லியன், கன்னடம் மற்றும் மலையாள டிரைலர்கள் தலா 3 மில்லியன் பார்வைகளையும் கடந்து, மொத்தமாக 65 மில்லியன் பார்வைகளைத் தற்போது வரை பெற்றுள்ளன.
நவம்பர் மாதம் வெளியான 'துரந்தர்' படத்தின் முதல் பாக டிரைலர் 94 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அப்போது ஹிந்தியில் மட்டுமே அப்படம் வெளியானது. அந்த சாதனையை இரண்டாம் பாக டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.