'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
சென்னை : நடிகை நயன்தாரா அம்மாவான விவகாரத்தில் விசாரணை, கிடப்பில் போடப்பட்டு உள்ளது. நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு, திருமணமான நான்கு மாதங்களில், இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது. வாடகை தாய் வாயிலாக, அவர்கள் குழந்தை பெற்றதை, தமிழக அரசு உறுதி செய்தது.
இதுகுறித்து விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்கக அதிகாரிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அப்போதே, எந்த மருத்துவமனை வாயிலாக, வாடகை தாய் நியமித்து குழந்தை பெற்றனர் என்பது போன்ற விபரங்களை, அதிகாரிகள் சேகரித்தனர். மேலும், வாடகை தாய் முறைக்கான சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ., ஒருவரின் தலையீடு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர். விசாரணை குழுவில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவான மாவட்டங்களில், கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவம், ஊரக சேவை பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'நடிகை நயன்தாரா வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றது தொடர்பாக, எவ்வித விசாரணையும் நடக்கவில்லை; அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை. விசாரணை துவங்குமா என்பது தெரியாது'என்றனர்.