2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தனுஷ் நடித்த ‛தி கிரேமேன்' என்ற ஹாலிவுட் படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனும் தான் ஒரு ஹாலிவுட் படத்தின் நடித்து வருவதாக ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். முன்னணி ஹாலிவுட் நடிகர் மார்க் ரவுலே நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு தி ஐ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கிரீஸ் நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுதவிர, தெலுங்கில் பிரபாஸ் உடன் சலார் மற்றும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோர் படங்களிலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.