ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சலார் மற்றும் தி ஐ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது காதலருடனான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். இசை, பாட்டு என பிஸியாகவும் உள்ளார். ஏற்கனவே தனது உடலில் தனது பெயரை தமிழில் பச்சை குத்தி உள்ளார் ஸ்ருதி. தற்போது அதன் அருகே முருகனின் வேலை டாட்டூவாக வரைந்திருக்கிறார்.
அது குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், ‛‛பச்சை குத்துவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்த வகையில் ஆன்மிகம் சம்பந்தமான பச்சை குத்த வேண்டும் என்று நினைத்தபோது முருகப்பெருமானின் ஞாபகம் தான் வந்தது. முருக பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு. அதனால் தான் டாட்டூ மூலம் எனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளேன். அதோடு ஆன்மிகமானது என்னை பாதுகாப்பாகவும் அடக்கமாகவும் வைத்திருப்பதற்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.