'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு |
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஸ்ருதிஹாசன் நடித்த வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் நடித்த வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்கள் திரைக்கு வந்து விட்ட நிலையில், தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
இதுதவிர தி ஐ என்ற ஆங்கிலப் படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். சலார் படத்தில் இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட வேடத்தில் தான் நடித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த ஸ்ருதிஹாசன் தற்போது அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தான் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தனது சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறா.
அதோடு இயக்குனர் பிரசாந்த் நீல், ஒளிப்பதிவாளர் புவன் ஆகியோருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் சலார் படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.