நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் நடித்த விக்ராந்த் ரோனா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அந்த படத்தின் ஹீரோ கிச்சா சுதீப், “ஹிந்தி தேசிய மொழி கிடையாது.. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்திய படங்களை எடுக்கிறார்கள்.. பிற மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றி காண்பதில்லை” என்று பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறும்போது, “இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால் பின் எதற்காக உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்.. இந்தி எப்போதுமே நமது தேசிய மொழியாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.
அப்போது அதற்கு பதிலளித்த சுதீப், நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டீர்கள் உங்களை நேரில் சந்திக்கும்போது அதற்கான காரணத்தை கூறுகிறேன் என்று கூறி அப்போதைக்கு அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் பாலிவுட் நடிகையும் அஜய் தேவ்கனின் மனைவியுமான நடிகை கஜோலுடன் இணைந்து நடிக்கும் தனது விருப்பத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தினார் சுதீப்.
அப்போது அவரிடம் உங்களுக்கும், அஜய் தேவ்கனுக்கும் ஏற்கனவே உரசல் இருக்கிறதே என்று கேட்க, “அது அப்போதே முடிந்துவிட்ட பிரச்சனை.. மேலும் அது கருத்து மோதல் தானே தவிர, எங்கள் இருவருக்குமான சொந்த பிரச்சனை அல்ல.. மற்றபடி அஜய் தேவ்கன் இப்போதும் என்னுடைய பேவரைட் நடிகர் தான்” என்று கூறினார் சுதீப்.
இதுகுறித்து அஜய் தேவ்கனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சுதீப், “இல்லை.. அவருடைய தொலைபேசி நம்பர் எனக்கு தெரியாது.. அதே சமயம் நடிகை கஜோலின் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்.. என்று கூறியுள்ளார் கிச்சா சுதீப்.