ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி |

நஜாய் பிலிம்ஸ் பிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரித்துள்ள படம் 'அங்கம்மாள்'. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி இந்தப் படம் உருவாகி உள்ளது.
இந்தப் படத்தில் சுயதிமிர் பிடித்த கிராமத்து பெண்ணாக கீதா கைலாசம் நடித்துள்ளார். அம்மா கேரக்டர்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகி ஆகியிருக்கிறார். படத்தில் அவர் ரவிக்கை அணியாத சுருட்டு பிடிக்கும் பெண்ணாக நடித்துள்ளது பரவலாக பேசப்பட்டு வருகிறது. படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது.
தமிழக கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். தான் காதலிக்கும் பெண் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் அம்மா ரவிக்கை அணிய வேண்டும் என்கிறான் மகன். இது எப்படியான பிரச்னையை உருவாக்குகிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் நடித்திருப்பது குறித்து கீதா கைலாசம் கூறியதாவது: அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு நான் பயமின்றி நேர்மையாக இருக்க வேண்டும். இது நான் செய்யும் நடிப்பு தொழிலுக்கான நேர்மை. அவளுடைய மவுனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டும். அங்கம்மாளை ஊக்கப்படுத்திய மக்களிடையே உண்மையான கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு பிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது.
படத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் பேச வேண்டியது இருந்தது. ஆனாலும் நான் அதிலும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைத்தான் பேசினேன். சுருட்டு பிடிக்க பல நாள் பயிற்சி எடுத்தேன். என்றாலும் என்னால் சுருட்டை பற்ற வைக்க முடியவில்லை. ரவிக்கை அணியாத பெண்களையும், சுருட்டு பிடிக்கும் பெண்களையும் நிறைய பார்த்தேன். அவர்களை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் நடிக்கும் போது அவர்களாக மாற வேண்டியதாகத்தான் உள்ளது.
எனது சிறுகதைகளை எப்போதும் பாராட்டும் என் மாமனார் (இயக்குனர் கே.பாலச்சந்தர்) இருந்திருந்தால் நிச்சயம் என் நடிப்பை பாராட்டி இருப்பார். இப்போது அவரை மிஸ் செய்கிறேன். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும்.
சிங்- சவுண்டுடன் நடிக்க வேண்டியிருந்ததால் படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம். எங்கள் கேமரா மற்றும் சவுண்ட் டீம் கண்ணுக்குத் தெரியாத கலைஞர்களைப் போல வேலை செய்து, சூழலின் அசல் சத்தத்தை படம் பிடித்துள்ளனர். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும். மக்களின் வரவேற்பு கிடைக்கும் என்றால் நிச்சயம் இதன் இரண்டாம் பாகம் வர வாய்ப்பிருக்கிறது. என்றார்.