தருமபுரி அருகே கார் விபத்து : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை பரிதாப பலி | தக் லைப் படத்தில் காணாமல் போன ஜாதிப்பெயர் | மத மாற்ற விவகாரத்தை பேசும் பரமசிவன் பாத்திமா | நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் |
சென்னை: பழம்பெரும் நடிகை ரங்கம்மாள் பாட்டி, 87, உடல்நலக் குறைவால் காலமானார்.
மறைந்த எம்.ஜி.ஆருடன், 'விவசாயி' படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் ரங்கம்மாள், 87. மேடை நாடகம் மற்றும் சினிமாவில் சிறு வேடத்தில் நடித்து வந்த இவர், ரஜினி, அஜித், விஜய், வடிவேலு, ராகவா லாரன்ஸ் ஆகியோருடன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடம் என, 500க்கும் மேற்பட்ட பன்மொழி படங்களில் நடித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இன்றி, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். வயிற்றுப் பிழைப்புக்காக மெரினாவில் கர்சிப், பொம்மை போன்றவற்றை விற்று வந்தார். உடல்நலக் குறைவால் சொந்த ஊரான கோவை அன்னுார் அருகே உள்ள தெலுங்குபாளையம் சென்ற அவர், இன்று(ஏப்.,29) காலமானார். ரங்கம்மாள் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.