அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தாவும் நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் நேற்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று சமந்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நயன்தாரா பற்றி சில வார்த்தைகள் எனக் கேட்டதற்கு சமந்தா, “நயன்தாரா நயன்தாராதான், அவரைப் போல வேறு ஒருவர் கிடையாது. அவர் உண்மையானவர், மிகவும் விசுவாசமானவர், நான் சந்தித்தவர்களில் மிகவும் கடின உழைப்பாளி,” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, சமந்தா முதல் முறையாக இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர். சமந்தா நடித்து அடுத்து 'சாகுந்தலம்' திரைப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. 'யசோதா' என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் தேவரகொன்டா ஜோடியாக மற்றொரு தெலுங்குப் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.