ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை டி.ஆர்.சுந்தரம். வெளிநாட்டில் சினிமா படித்து, சொந்தமாக ஸ்டூடியோ நடத்தி 136 படங்களை தயாரித்தார். இதில் சுந்தரம் 52 தமிழ் படங்களையும், 7 சிங்கள படங்களையும், 8 மலையாளப் படங்களையும் மற்றும் தெலுங்கு, கன்னடம் இந்தி ஆங்கிலம் உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.
அவர் தயாரித்த படங்களில் முக்கியமானது 'கொஞ்சும் குமரி'. 'மெனி ரிவர்ஸ டூ கிராஸ்' என்ற ஆங்கில படத்தை தழுவி உருவான இந்த படத்தில் நாயகி ஒரு பெண் ரவுடி. இதற்கு பொருத்தமான நடிகையை தேடி சலித்துப்போன சுந்தரம் அப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்த மனோரமாவை ஹீரோயின் ஆக்கினார். ஒரு பவர் புல்லான சீரியசான கேரக்டருக்கு காமெடி நடிகையா என்று அப்போது பலரும் விமர்சித்தார்கள். ஆனால் அந்த படம் மனோரமாவின் நடிப்புக்காகவே வெற்றி பெற்றது.
'கொஞ்சும் குமரி' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் சுந்தரம், திடீர் மாரடைப்பால் 1963 ஆகஸ்ட் 29 ஆம் தேதி , சேலத்தில் மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வல காட்சிகள் படத்தில் இணைக்கப்பட்டு திரையிடப்பட்டது. ஒரு நிஜ மனிதனின் இறுதி ஊர்வல காட்சி படத்தில் இணைக்கப்பட்டது அதுதான் முதல் முறை.