‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
தங்கமணி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‛பேராண்டி'. இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவர் மறைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன நடந்தது என்று இயக்குனரிடம் கேட்டோம்.
அவர் கூறியது, "பேரன் பாட்டி உறவை சொல்லும் படம் பேராண்டி. பாட்டியாக நடிக்க ஆச்சி மனோரமாவை முன்பே அணுகினோம். ஆனால் உடல்நிலை காரணமாக அவர் நடிக்கவில்லை அவருக்கு பதில் நடிகை லதா நடித்தார் ஆனாலும் எங்களுக்காக பச்சை மலை காட்டுக்குள்ள பவளமலை ஓரத்திலே என்ற பாடலை மனோரமா பாடி கொடுத்தார். ஹித்தேஷ் முருகவேல் இசை அமைத்தார்.
சென்னை ஸ்டூடியோ ஒன்றில் மனோரமா வந்து சின்சியராக பாடியது மறக்க முடியாத நிகழ்வு. அவரால் நடிக்க முடியாவிட்டாலும் அவர்தான் நடிகை லதாவை சிபாரிசு செய்தார். சினிமாவுக்காக மனோரமா பாடிய கடைசி பாடல் இதுதான். சூழ்நிலை காரணமாக இப்போதுதான் படத்தை வெளியிட உள்ளோம். கோபிசெட்டிபாளையம் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. ஆடு மேய்ப்பரளாக லதா வருகிறார். பேரனின் காதலுக்கு எப்படி உதவுகிறார் என கதை நகர்கிறது. நானே அந்த பாடலை எழுதியுள்ளேன். இத்தனை ஆண்டுகள் கழித்து மனோரமா பாடிய பாடலை கேட்பது புது அனுபவமாக இருக்கும்'' என்றார்.